உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த 'மின்னல் முரளி' நடிகை

அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த 'மின்னல் முரளி' நடிகை


'புஷ்பா' படத்தை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லியின் டைரக்ஷனில் 'ராக்கா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொரு மொழியைச் சேர்ந்த முக்கிய நடிகர், நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைத்து வருகிறார் இயக்குனர் அட்லி. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகை பெமினா ஜார்ஜ் இந்தப்படத்தில் தற்போது இணைந்துள்ளார்.

2021ல் மலையாளத்தில் சூப்பர்மேன் கதை அம்சத்துடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'மின்னல் முரளி' படத்தில் புரூஸ்லி பிஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் பெமினா ஜார்ஜ். மின்னல் முரளி படத்தை பார்த்துவிட்டு தான் இந்த வாய்ப்பு தனக்கு தேடி வந்ததாக அவரே இந்த தகவலை தற்போது உறுதிப்படுத்தியும் உள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “2004ல் வெளியான 'ஹேப்பி' படத்தை பார்த்ததில் இருந்து அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகை நான். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் இவ்வளவு பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை என்று கூறியுள்ளார்” பெமினா ஜார்ஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !