'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள்
ADDED : 131 days ago
'பைசன்' படத்தை அடுத்து மாரி செல்வராஜ் தனது 6வது படமாக 'மஞ்சணத்தி' எனும் படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை நேற்று (ஜூன் 2) வெளியிட்ட மாரி செல்வராஜ், அதில் இளையராஜா இசையமைக்கிறார் என்ற அப்டேட் வெளியிட்டார். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் நடக்கும் கதையாக உருவாகும் இப்படத்தில் நடிகர் கதிர் நாயகனாக நடிக்கிறார்.
அதேபோல், படத்தில் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் என இரு நாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதற்கான அறிவிப்பை இவர்களே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தெரியப்படுத்தியுள்ளனர்.
தற்போது பிரியங்கா மோகன், சிம்புவின் 'அரசன்' படத்திலும், கயாடு லோஹர், அதர்வாவின் 'இதயம் முரளி' படத்திலும் நடித்து வருகின்றனர்.