உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன்

'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன்


மலையாள திரையுலகில் அம்மா என்கிற பெயரில் நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது கடந்த வருடம் மோகன்லால் தலைமையிலான நிர்வாக குழு ராஜினாமா செய்த பிறகு அதற்கடுத்து நடைபெற்ற தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக எந்த பிரச்னைகளும் இல்லாமல் சென்ற நிலையில் சமீப நாட்களாக திரிஷ்யம் பட நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் இன்னொரு நடிகையான நீனா குறூப் உள்ளிட்டோர் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர் டினி டாம் மற்றும் நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன் காவல் துறையிலும் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் நடிகை அன்சிபா ஹாசன் கேரள முதல்வரிடம் புகார் தெரிவிக்கும் அளவிற்கு சென்றது. இந்த நிலையில் நடிகர் சங்க தலைவரான நடிகை ஸ்வேதா மேனன் இந்த புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐவர் குழுவை அறிவித்துள்ளார். இதில் தலைவரான அவரும் துணைத் தலைவரான குக்கு பரமேஸ்வரன் என்பவரும் இடம் பெறுகிறார்கள். மீதம் மூன்று பேர் குறித்த விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !