உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்திக் ஆரியனுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! - ராஷி கண்ணா வெளியிட்ட தகவல்

கார்த்திக் ஆரியனுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! - ராஷி கண்ணா வெளியிட்ட தகவல்


தற்போது தமிழில் 'ரவுடி அண்ட் கோ' என்ற படத்தில் நடித்து வரும் ராஷி கண்ணா, ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்த 'உஸ்தாத் பகத்சிங்' படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் இந்த படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது. இதனால் தற்போது பாலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் ராஷி கண்ணா.

இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆரியனுடன் இணைந்து நடிப்பது எனது நீண்டநாள் ஆசை. கார்த்திக் ஆர்யன் பாலிவுட்டின் இதய கவர்ச்சியாக இருக்கிறார். அவருடன் ஒரு காதல் கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது. வலுவான உணர்ச்சி ஆழத்தை இருவருக்கும் இடையே வெளிப்படுத்தக்கூடிய கதையில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அப்படிப்பட்ட காதல் கதை எங்கள் இருவருக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார் ராஷி கண்ணா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !