உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர்

பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர்

அருண்குமார் சேகரன், நதியா சோமு நடிப்பில் உருவாகியுள்ள படம ப்ராமிஸ். ஹீரோ அருண்குமாரே படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சத்தியத்தின் சோதனையை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டிருப்பார்கள். அப்படிப் படத்தில் கதாநாயகன் எதிர் கொள்ளும் தருணங்களே கர. பர்ஸ்ட் லுக்கை இயக்குன சேரனும், நடிகர் நட்டியும் வெளியிட்டனர். வேலூர் ,ஓசூர் ,கிருஷ்ணகிரி போன்ற வடதமிழ்நாட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

வாய்ஸ் ஓவர் எனப்படும் பின்னணிக் குரல் கொடுக்க வந்த தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கர் படத்தின் காட்சிகளைப் பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டுப் பாராட்டினார். ஜூன் 26 ஆம் தேதி படம் வெளியாகிறது.

'எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது 'சத்திய சோதனை' என்கிற சுயசரிதையைப் படியுங்கள்' என்றார் மகாத்மா காந்தி. அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம். அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு பண்பாட்டோடு கலந்த ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற படமாக ப்ராமிஸ் அமைந்துள்ளது'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !