ராஷ்மிகா நடிக்கும் 'மைசா' படத்தின் டீசர் எப்போது?
ADDED : 9 hours ago
ராஷ்மிகா மந்தனா தற்போது கதையின் நாயகியாக நடித்து வரும் படம் 'மைசா'. பழங்குடியின பெண்ணாக அவர் நடிக்கும் இந்த படத்தை ரவீந்திர புல்லே இயக்குகிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் மைசா படத்தின் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்த தகவலை வெளியிட்டுள்ள அப்படத்தின் தயாரிப்பாளர் அஜய் சாய்வு ரெட்டி, விரைவில் மைசா படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
பல மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த மைசா படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். தாரக் பொன்னப்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து 'ரணபாலி' என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்து எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில் நடிக்க போகிறார்.