உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''என் படங்களையே நான் பார்த்ததில்லை'': ஷாருக்கான்

''என் படங்களையே நான் பார்த்ததில்லை'': ஷாருக்கான்


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' எனும் படத்தில் நடித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 24ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் சாஜித் கான் தொகுத்து வழங்கும் 'யாரோன் கி பாரத்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாருக்கான், ''எனது சொந்த படங்களான தீவானா, ஸ்வதேஸ், பரதேஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களை முழுமையாக பார்த்ததில்லை. டப்பிங் மற்றும் எடிட்டிங் பணியின் போது மட்டும் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஒரு ரசிகரை போல தியேட்டரிலோ, வீட்டிலோ அமர்ந்து முழு படத்தையும் பார்த்ததில்லை'' எனத் தெரிவித்தார்.

பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகரான ஷாருக்கான், தான் நடித்த படங்களையே முழுமையாக பார்த்ததில்லை எனக் கூறியது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !