பார்ட் 2 படங்கள் பண்ணாதது ஏன் : விஷ்ணு விஷால் சொன்ன தகவல்
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி 2 படம் ஜூலை 3ல் ரிலீஸாகிறது. அவர் அளித்த பேட்டி : ‛‛நான் நடித்த பல படங்களில் பார்ட் 2வில் நடிக்க வாய்ப்பு வந்தது. சில படங்கள் செட்டாகவில்லை. குறிப்பாக, என் முதல் படமான வெண்ணிலா கபடி குழுவின் பார்ட் 2வில் நடிக்க கேட்டார்கள். நான் முதல் பாகத்தில் இறந்து விடுவேன். பார்ட் 2வில் கதையை மாற்றி எடுத்தால் செட் ஆகாது என்று சொல்லிவிட்டேன். நீர்ப்பறவை படத்தின் கிளைமாக்சிலும் இறந்துவிடுவேன். அதனால் அதிலும் நடிக்கவில்லை.
இப்போது கட்டா குஸ்தி 2வில் நடிக்கிறேன். ஒரு ஸ்போர்ட்ஸ் படம் பார்ட் 2 வருவது இதுதான். இந்த படத்தின் கடைசியில் பார்ட் 3வுக்காக லீடு வைக்கவில்லை. ஆனாலும், எடுக்க வாய்ப்பு உண்டு. என் படங்கள், நான் தயாரிக்கும் படங்கள் ஓடிடியில் ஈஸியாக விற்றுவிடுகிறது என்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் நான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைதான். மற்ற பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் கரு, கதை புதிதாக இல்லாவிட்டால் ஓடிடியில் வாங்கமாட்டார்கள்.
கட்டா குஸ்தி வெற்றிக்கு இயக்குனர் செல்லா அய்யாவு தான் காரணம். பார்ட் 2 வந்தபின் அவருக்கு கார் உள்ளிட்ட பரிசு அளிப்பேன். விரைவில் என் 25வது படத்தில் நடிக்க உள்ளேன். என் மனைவி ஜூவாலா கட்டா , என் படங்களை தியேட்டரில் தான் பார்ப்பார். முன்பே கதை சொல்ல வேண்டாம், படப்பிடிப்பு தளம் அனுபவம் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவரும் விளையாட்டு வீரர் என்பதால், நானும் அடிப்படையில் விளையாட்டு வீரர் என்பதால் எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட கதைகள் பிடித்து இருக்கிறது'' என்றார்.