உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 3வது முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைந்த ரம்யா நம்பீசன்

3வது முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைந்த ரம்யா நம்பீசன்

'அயோத்தி' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மந்திர மூர்த்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதையின் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். தமிழ்குமரன், ரத்தம் படங்களுக்கு பிறகு 3வது முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைகிறார் ரம்யா நம்பீசன். இன்னொரு நாயகியாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார்.

'டாணாக்காரன்', 'அயோத்தி', 'சிறை' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், மீண்டும் மந்திரமூர்த்தியுடன் இணைந்திருக்கிறார். படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். மதுரையில் படப்பிடிப்பு தொடங்கி, முழு வீச்சில் நடந்து வருகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !