உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மன்னிப்பு கேட்ட 'ஜனநாயகன்' எடிட்டர் : ரஜினி படத்தில் வாய்ப்பு

மன்னிப்பு கேட்ட 'ஜனநாயகன்' எடிட்டர் : ரஜினி படத்தில் வாய்ப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி எடிட்டர் பிரதீப் ராகவ். விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தில் பணியாற்றினார். இந்த படம் வெளியில் கசிந்தது. இதை தொடர்ந்து பிரதீப் ராகவிடம் உதவியாளர்களாக பணியாற்றிவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். என்றாலும் படத்தின் எடிட்டர் என்கிற முறையில் பிரதீப் ராகவும் இதற்கு பொறுப்பு என்று அவரை தென்னிந்திய சினிமா எடிட்டர்கள் சங்கத்தில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தார்கள்.

இந்த நிலையில், பிரதீப் ராகவ் சங்கத்திடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார். பிரதீப் ராகவ் அளித்த மன்னிப்பு கடிதத்தை பரிசீலித்த சங்க நிர்வாகம், அவர் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சங்க தலைவர் கோபி அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பிரதீப் ராகவ், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 'தர்மன்' படத்தில் படத்தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !