மாஸ்டர் பீஸ், வைரம் ; பாலன் திரைப்படத்திற்கு சூர்யா ஜோதிகா பாராட்டு
கடந்த வாரம் மலையாளம் மற்றும் தமிழில் பாலன் தி பாய் என்கிற படம் வெளியானது. மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு தாய்க்கும் மகனுக்குமான அன்பையும் தாயைப் பிரிந்த மகனின் தேடலையும் வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறார் சிதம்பரம். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யா, ஜோதிகா இருவரும் சமீபத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை ஒரு மாஸ்டர்பீஸ் என்று ஜோதிகா குறிப்பிட்டுள்ள ஜோதிகா மிக நேர்த்தியாகவும், அறிவுப்பூர்வமாகவும் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது என்றும் படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமாகவும் அதே சமயம் எதிர்பாராத சிற்பங்களைக் கொண்டதாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் நடித்த கலைஞர்கள் குறித்து அவர் பாராட்டும் போது நடிகர் டொவினோ தாமஸ் தனது நட்சத்திர அந்தஸ்தை துறந்து இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக நடித்த பர்சானா பலதிங்கல் மற்றும் குழந்தைகளாக நடித்த அதிஷேஷன், சினன் ஆகியோரின் நடிப்பு அபாரமாக இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார்.
நடிகர் சூர்யாவும் தன் பங்கிற்கு மலையாள திரையுலகில் இது மற்றும் ஒரு வைரம் என்று பாராட்டியுள்ளார். இந்த படத்திற்கு ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் திரைக்கதை எழுதி இருக்கிறார். ஜித்து மாதவனின் டைரக்ஷனில் தான் தற்போது சூர்யா நடித்து வருகிறார். அந்த நட்பின் அடிப்படையில் சூர்யா ஜோதிகா இருவரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.