ரவி மோகனின் கராத்தே பாபு ரிலீஸ் தேதி வெளியானது
சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படத்தை அடுத்து கராத்தே பாபு என்ற படத்தில் நடித்துள்ளார் ரவி மோகன். கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளே இந்த படம் அரசியல் கதையில் உருவாகி உள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படம் வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரவி மோகனுக்கு ஜோடியாக தவ்தி ஜிவால் நடிக்க, கே.எஸ். ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், சக்தி வாசு, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அரசியல்வாதிகள் குறித்து பல கதைகள் வந்திருந்தபோதும், இந்த படம் ஒரு எம்எல்ஏவின் மறுபக்கத்தை சொல்கிறது. அதாவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள், வலிகள் குறித்த இன்னொரு பக்கத்தை சொல்லக்கூடிய கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது.