உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ஆனந்த் ராம் உடன் காதலில் விழுந்த பிரிகிடா... விரைவில் திருமணம்

நடிகர் ஆனந்த் ராம் உடன் காதலில் விழுந்த பிரிகிடா... விரைவில் திருமணம்

‛ஆஹா கல்யாணம்' என்ற தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா. தொடர்ந்து ‛மாஸ்டர், இரவின் நிழல், கோழிப்பண்ணை செல்லதுரை, மார்கன், ஹாட் ஸ்பாட் 2 மச்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் காதலில் விழுந்துள்ளார். ‛மீசைய முறுக்கு' படத்தில் நடித்த ஆனந்த் ராமை காதலிக்கிறார். சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்துள்ள ஆனந்த் ராம், ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தற்போது சத்தமின்றி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஆனந்த் ராமின் பிறந்தநாளான நேற்று தாங்கள் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், இத்தனை ஆண்டு காலமாக எங்கள் மீது அளவற்ற அன்பையும், ஆதரவையும் பொழிந்து வரும் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக திரையுலகினர், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் மற்றும் அன்பு ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தூணாக நின்ற நீங்கள், எங்களது இந்த புதிய தொடக்கத்திற்கும் உங்கள் ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஆனந்த் ராம் - பிரிகிடா ஜோடியின் திருமணம் இந்த ஆண்டே நடைபெறவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் திருமண தேதி ஆகியவை வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !