உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஜமவுலி பெயரில் ஒரு நிரந்தர இருக்கை ஒதுக்கிய பாரிஸ் திரையரங்கம்

ராஜமவுலி பெயரில் ஒரு நிரந்தர இருக்கை ஒதுக்கிய பாரிஸ் திரையரங்கம்

'பாகுபலி' படத்திற்குப் பிறகு ராஜாமவுலி படங்களுக்கு என வெளிநாடுகளில், குறிப்பாக ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ராஜமவுலி கடந்த சில நாட்களாக ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பாரிஸில் உள்ள புகழ்பெற்ற சினிமாடிக் பிரான்சிஸ் திரையரங்கில் ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டன..

இதில் அவரது இயக்கத்தில் சுதீப், சமந்தா நடித்த 'ஈகா' (நான் ஈ) திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அந்த ஐ வில் பேக் என்று திரையில் எழுதும் தருணத்தில் படம் பார்த்த ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாகமாக கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இயக்குனர் ராஜமவுலிக்கு ஒரு சிறப்பான கவுரவம் அளிக்கும் விதமாக, இந்த சினிமாடிக் பிரான்சிஸ் திரையரங்கில் ராஜமவுலியின் பெயரில் ஒரு இருக்கை நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.. இதற்காக தனது நன்றியைத் தெரிவித்துள்ள ராஜமவுலி, இது நான் கனவிலும் எதிர்பார்க்காத ஒன்று,. என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் தருணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !