ஊர்வசியின் காட்சியை டப்மாஷ் செய்த வித்யா பாலன்
ADDED : 5 minutes ago
பாலிவுட் நடிகை வித்யா பாலன், மலையாளத் திரை உலகில் இருந்து பாலிவுட்டுக்குச் சென்றவர். மலையாளப் படங்களில் நடிக்காவிட்டாலும் அவற்றின் மீதான ஆர்வம் அவருக்கு உண்டு. அவ்வப்போது மலையாளத்தில் பிரபலமான சில காட்சிகளை எடுத்து ரீ-கிரியேட் செய்து, தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் வித்யா பாலன்.
அந்த வகையில், ஊர்வசி, மீரா ஜாஸ்மின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'அச்சுவிண்டே அம்மா' என்கிற படத்தில் இருந்து ஊர்வசி பேசும் ஒரு புகழ்பெற்ற வசனக் காட்சியை டப்மாஷ் செய்து, தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வித்யா பாலன். கூடவே, ஊர்வசி சேச்சி, மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.