உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த மாதம் எந்த தேதியில் ஜனநாயகன் படம் ரிலீஸ்

இந்த மாதம் எந்த தேதியில் ஜனநாயகன் படம் ரிலீஸ்

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு ஒரு வழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக தகவல். பல கட்ட போராட்டங்களுக்குபின் ஏ சான்றிதழை பெற்று இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் தெரிகிறது. இப்போது சென்சார் போர்டு குழுவினர் கொடுத்த கட் மற்றும் ஒலி நீக்கம் போன்ற விஷயங்களை படக்குழு செய்து வருகிறதாம். அதை பக்காவாக முடித்தபின் சென்சார் போர்டு அதிகாரிகளிடம் சமர்பித்து முறைப்படி சான்றிதழ் வாங்குவார்கள். அதற்கு இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என தெரிகிறது. அதனால், ஜூலை 10ல் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை.

ஜூலை 17, ஜூலை 23, ஜூலை 30ல் ஆகிய தேதிகளில் ஒன்றில் படம் வெளியாக வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்கள், அந்த படக்குழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அதேசமயம், இந்த தேதிகளில் பல படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன.

ஜனநாயகன் படம் வந்தால் அடுத்த இரண்டு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்காது. அதனால், படங்கள் ரிலீசை இன்னும் தள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஜனநாயகன் சென்சார் சான்றிதழை பெற்றபின் டிரைலர் வெளியீட்டு அல்லது ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடத்த படக்குழு விரும்புகிறதாம். அதில் முதல்வர் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு. அதேசயம், ஜனநாயகன் படக்குழுவினர் அவரை சந்தித்து பேச வாய்ப்பு தெரிகிறது.

முதல்வரான பின் வரும் படம் என்பதால் தமிழக முதல்வர் என்ற வாசகம் திரையில் வரும் என்றும் கூறப்படுகிறது. படம் லீக் ஆகி, கோடிக்கணக்கான மக்கள் பார்த்துவிட்டாலும் ஜனநாயகன் படத்துக்கு வரவேற்பும், வசூலும் இருக்கும் என படக்குழு நம்புகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !