உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அகில் படத்தின் ஆரம்பக் காட்சிக்காக குரல் கொடுத்த ஜூனியர் என்டிஆர்

அகில் படத்தின் ஆரம்பக் காட்சிக்காக குரல் கொடுத்த ஜூனியர் என்டிஆர்


நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில், தெலுங்கில் தற்போது நடித்துள்ள படம் 'லெனின்'. முரளி கிஷோர் அப்புரு என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருக்கிறார். கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நாகார்ஜுனா, இந்தப் படம் பற்றி கூறும்போது, இது ஒரு ராயலசீமாவின் மகாபாரதம் போல இருக்கும் என சொல்லி இருந்தார். அதற்கு காரணம் படத்திலும் ராமாயணம் மற்றும் மகாபாரத தொடர்பு இருப்பது, தற்போது ஜூனியர் என்.டி.ஆர். வாய்ஸ் கொடுத்ததன் மூலமாக தெரிய வந்துள்ளது.

இந்தப் படத்தின் கதைக்களமாக இரண்டு கிராமங்கள் இருக்கின்றன. ஸ்ரீராமபுரம் மற்றும் பரத மிட்டா ஆகிய இடங்களைப் பற்றியும், அந்த உலகம் குறித்தும் படத்துவக்கத்திலேயே ஜூனியர் என்.டி.ஆர். தனது குரல் மூலமாக அறிமுகப்படுத்துகிறார். இதற்காக சமீபத்தில் ஸ்டுடியோவுக்கு வந்து டப்பிங் பேசி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். உறுதியான நம்பிக்கையில் இருந்து உருவான உலகம், அறிமுகம் தேவையில்லாத ஒரு குரலால் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்து, இது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் அகில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !