உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீருக்கடியில் சண்டைக் காட்சியில் நடித்து அசத்திய ராஷ்மிகா

நீருக்கடியில் சண்டைக் காட்சியில் நடித்து அசத்திய ராஷ்மிகா

இயக்குனர் ஹனு ராகவபுடியின் உதவியாளரான ரவீந்திர புல்லே இயக்குனராக அறிமுகமாகும் படம் மைசா. இதில் பழங்குடியின பெண் வேடத்தில் ராஷ்மிகா கதையின் நாயகியான நடித்து வருகிறார். இப்படத்துக்காக நீருக்கடியில் இடம்பெற்ற ஒரு அதிரடி சண்டைக் காட்சியில் வெற்றிகரமாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படி நீருக்கடியில் சண்டைக்காட்சியில் நடித்த இந்தியாவின் முதல் பெண் நடிகை ராஷ்மிகா தான் என்று சொல்கிறார்கள்.

இது அவரது ஆக் ஷன் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயமாக தொடங்குகிறது. இந்திய சினிமாவையே அதிர வைக்கப்போகும் இந்த அசத்தலான ஆக் ஷன் காட்சியை திரையில் காண தயாராகுங்கள் என்று மைசா படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக இந்த சண்டைக் காட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ராஷ்மிகா இதுவரை பார்த்திராத ஒரு ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றுகிறார். இந்த புதிய முயற்சியின் மூலம், ராஷ்மிகாவின் திரைப்பயணத்திலேயே மிகவும் சவாலான ஒரு பாத்திரத்தை வழங்குவதோடு, இந்திய ஆக் ஷன் சினிமாவின் எல்லைகளையும் மைசா திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளது. இப்படத்தை, அஜய் மற்றும் அனில் சய்யபுரெட்டி ஆகியோர் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !