உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 47வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு : வெளியீட்டு தேதி விரைவில் அறிவிப்பு

சூர்யா 47வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு : வெளியீட்டு தேதி விரைவில் அறிவிப்பு

கருப்பு படத்தின் வெற்றிக்குப் பிறகு, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து மலையாளத்தில் ரோமாஞ்சனம், ஆவேஷம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய ஜித்து மாதவனுடன் இணைந்துள்ளார் சூர்யா. அப்படத்துக்கு தற்காலிகமாக சூர்யா 47 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பின் பின்னணி வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். பிரேமலு புகழ் நஸ்லென் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். ஜித்து மாதவன் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை விரைவில் வெளியாகவுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !