உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரி, ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

சூரி, ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?


நடிகர் சூரி கதாநாயகனாக 'விடுதலை, கருடன், மாமன்' என மூன்று தொடர் வெற்றி படங்களை தந்துள்ளார். தற்போது 'மண்டாடி' என்கிற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு 'இன்று நேற்று நாளை, அயலான்' ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி அடுத்து நடிக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவை சேர்ந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இப்படம் 2015ம் ஆண்டில் சென்னை நகரில் நிகழ்ந்த வெள்ளத்தின் துயர சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது என்கிறார்கள்.

ஏற்கனவே இந்த படத்திற்கான சில டெஸ்ட் லுக் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் சென்னையில் துவங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !