உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரித்விராஜின் 'கலிபா' பட கதாநாயகி அறிவிப்பு

பிரித்விராஜின் 'கலிபா' பட கதாநாயகி அறிவிப்பு

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'புலி முருகன்' படத்தை இயக்கியவர் வைசாக். தற்போது பிரித்விராஜை வைத்து 'கலிபா' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானதே 2010-ல் பிரித்விராஜை வைத்து இயக்கிய 'போக்கிரி ராஜா' என்கிற படத்தில் தான். அதைத் தொடர்ந்து 16 வருடங்கள் கழித்து மீண்டும் பிரித்விராஜை இயக்குகிறார் வைசாக். இந்தப் படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் கதாநாயகியாக மாளவிகா சர்மா நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடிப்படையில் வழக்கறிஞரான இவர், தெலுங்கில் ரவி தேஜா நடித்த 'நிலா டிக்கெட்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன்பிறகு தமிழில் சுந்தர் சி-யின் 'காபி வித் காதல்' படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது 'கலிபா' படத்தின் மூலமாக மலையாளத் திரையுலகிலும் இவர் அறிமுகமாகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !