பாலகிருஷ்ணா படத்தில் பவர்புல் வில்லியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ?
ADDED : 10 hours ago
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் அவரது 111வது படத்தை கோபிசந்த் மாலினேணி இயக்கி வருகிறார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தை கொரட்டலா சிவா இயக்கவுள்ளார். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகி வரும் இதில் வித்யாபாலன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கதாநாயகியாக அல்லாமல், பாலகிருஷ்ணாவுக்கு ஒரு பவர்புல் வில்லியாகத் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறாராம். பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும், அதேசமயம் கதையில் சில முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தும் வகையிலும் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.