உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்ஜிஆர் ராசி கடைசி படத்திலும் தொடர்கிறதா ?

எம்ஜிஆர் ராசி கடைசி படத்திலும் தொடர்கிறதா ?

தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்று வெற்றி பெற்றவர்களில் அதிகம் பரபரப்பாகப் பேசப்பட்டவர்கள் நடிகர்கள்தான். எழுத்தாளர்கள், வசனகர்த்தாக்கள் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகினர். ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியவர் விஜய்.

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார். அரசியலில் தன்னை எம்ஜிஆர் வாரிசு போல காட்ட முயற்சித்து வருகிறார் விஜய். ஆனால், அவரது கட்சியினரோ எம்ஜிஆரை விடவும் சிறந்தவர் என கட்டமைத்து வருகிறார்கள்.

நேற்று வெளியான விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் கூட எம்ஜிஆர் உருவப்படம் படத்தின் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்ஜிஆர் போல கையில் சாட்டை எடுத்துக் கொண்டு அரசியல்வாதி பிரகாஷ்ராஜையும் அவரது அடியாட்களையும் நான் ஆணையிட்டால் என அடிக்கிறார்.

'ஜனநாயகன்' படம் வெளியாகும் முன்பு வரை எம்ஜிஆர் முதல்வராகப் பதவியேற்று வந்த கடைசி படமாக 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் இருந்தது. அது போல விஜய் நடித்தும் கடைசி படமாக 'ஜனநாயகன்' வருகிறது என ஒப்பிட்டுப் பேசினார்கள்.

'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் ஒரு நடிகராக எம்ஜிஆரை மீட்காமல் தோல்வியடைந்த ஒரு படம். அது போல விஜய்க்கும் 'ஜனநாயகன்' அமைந்துள்ளதாக அவரது அரசியல் எதிரிகளும், சினிமா எதிரிகளும் நேற்று முதலே பேச ஆரம்பித்துவிட்டார்கள். படத்திற்கான விமர்சனங்களும் அப்படித்தான் வந்து கொண்டிருக்கின்றன.

'ஜனநாயகன்' படம் நேற்று முதலே சமூக வலைத்தளங்களில் 'டிரோல் மெட்டீரியல்' ஆகிவிட்டது. பலரும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். மற்ற மாநில மொழிகளில் தமிழை விடவும் மோசமான விமர்சனம், ரேட்டிங் கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !