உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸின் ‛ஸ்பிரிட்' படம் மூலம் மீண்டும் டோலிவுட்டிற்கு வரும் கத்ரீனா கைப்?

பிரபாஸின் ‛ஸ்பிரிட்' படம் மூலம் மீண்டும் டோலிவுட்டிற்கு வரும் கத்ரீனா கைப்?


பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் ‛ஸ்பிரிட்'. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் போலீஸ் கதையில் உருவாகும் இந்த அதிரடி ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 சதவீதம் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பிரபாஸூடன் திரிப்தி திம்ரி, விவேக் ஓபராய், ஐஸ்வர்யா தேசாய், காஞ்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக ஹிந்தி நடிகை கத்ரீனா கைப்பிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கத்ரீனா கைப், விக்கி கவுசல் தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பரில் விஹான் கவுசல் என்ற மகன் பிறந்தான். மகன் பிறந்து 8 மாதங்களே ஆவதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து மகனை பராமரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார் கத்ரீனா கைப். அதனால் சில நிபந்தனைகளுடன் இப்படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அதனால் படக்குழுவும் அவரது கண்டிஷன்களுக்கேற்ப படப்பிடிப்பை நடத்த முடியுமா என்று பரிசீலனை செய்து வருகிறார்கள்.

ஒருவேளை கத்ரீனா இப்படத்தில் இணைந்து நடித்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் டோலிவுட்டிற்கு திரும்பும் படமாக ஸ்பிரிட் அமையும். கடைசியாக 2005ல் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ‛அல்லரி பிடுகு' என்ற படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்பிரிட் படம் மார்ச் 5, 2027ல் பல மொழிகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !