அதிக வியாபாரத்தில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, மமிதா பைஜூ மற்றும் பலர் நடித்துள்ள நேரடி தமிழ்ப் படமான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை 40 கோடிக்கும் அதிகமாக எம்ஜி முறையில் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா நடித்து இதற்கு முன்பு வெளிவந்து 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'கருப்பு' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விட இது சில கோடிகள் அதிகம் என்கிறார்கள்.
'கருப்பு' படத்தின் வசூல் இந்த 'விஸ்நாத் அண்ட் சன்ஸ்' படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கான ஓடிடி மற்றும் சாட்டிலைட் டிவி உரிமைகள் ஏற்கெனவே நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம். அதிலேயே படத்தின் பெரும்பான்மை பட்ஜெட் வசூலாகிவிட்டதாம். இந்தப் படமும் வெற்றி பெற்றுவிட்டால் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தரமான நல்ல வியாபாரத்தை சூர்யா அவருக்கென ஏற்படுத்திவிடுவார் என்கிறார்கள்.