தனுஷ் 56வது பட அப்டேட் தந்த தமிழரசன் பச்சமுத்து!
ADDED : 8 hours ago
நடிகர் தனுஷ் 'ஓம்' படத்திற்கு பிறகு டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'லப்பர் பந்து' பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் வருத்தத்துடன் இருந்தனர். இன்று தனுஷின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தனுஷ் 56வது படத்தில் இருந்து அப்டேட் வரும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் தமிழரசன் பச்சமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனுஷூக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன், நான் நம்பிக்கை உடனும், என் விருப்பத்துடனும் ஒரு மாஸ் ஆன பிளாக் பஸ்டர் படத்தை இயக்குவதற்கு உழைக்கிறேன் என உறுதி தருகிறேன். ஆடி மாதத்திற்கு பிறகு படப்பிடிப்பு தொடங்குகிறது என தனுஷூடன் எடுத்த போட்டோ உடன் அப்டேட் தந்துள்ளார் தமிழரசன் பச்சமுத்து.