உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகும் ராமாயணா டிரைலர்

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகும் ராமாயணா டிரைலர்

ஹிந்தியில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛ராமாயணா'. நிதிஷ் திவாரி இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் இசையமைக்கிறார்கள். ஜூலை 24ம் தேதி டிரைலர் வெளியாவதாக கூறப்பட்ட நிலையில் திடீரென்று அது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ராமாயணா படத்தின் டிரைலர் ஜூலை 30ம் தேதியான நாளை அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த படத்தின் பூஜையில் இருந்து ஒவ்வொரு விஷயங்களையும் நல்ல நேரம் பார்த்து தொடங்கி வரும் படக்குழு, தற்போது டிரைலரையும் நல்ல நேரம் பார்த்து பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடுகிறார்கள்.

ரூ.4000 கோடி பட்ஜெட்டில் இருபாகங்களாக உருவாகும் இந்த படத்தை உலக அளவில் உள்ள ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் இப்படக் குழு ஈடுபட உள்ளது. உலகளவில் இந்த படத்தை சோனி நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்தப் படத்தை ரன்பீர் கபூர், யஷ் ஆகியோரை போன்று சாய்பல்லவியும் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறார். ஹிந்தியில் அவர் அறிமுகமான ஏக் தீன் என்ற முதல் படம் பிளாப் ஆனபோதும் ராமாயணா படம் தனக்கு மிகப்பெரிய ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் சாய்பல்லவி. ராமாயணா படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !