உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தி பாரடைஸ் படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடனம் ஆடும் கீர்த்தி சுரேஷ்

தி பாரடைஸ் படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடனம் ஆடும் கீர்த்தி சுரேஷ்

நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகி வரும் ஆக்ஷன் படம் தி பாரடைஸ். இப்படத்திற்கான வெளியீட்டுத் தேதியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. படப்பிடிப்பு நீட்டிக்கப்பட்டதே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்து வெளியாகியுள்ள ஒரு செய்தியில், தி பாரடைஸ் படத்தின் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாட கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நானியுடன் உள்ள நெருங்கிய நட்பு காரணமாகவே இப்படத்தில் அவர் ஒரு பாடலில் நடனமாடுவதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் முதல் படமான தசராவில் கீர்த்தி சுரேஷ் தான் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்க, மோகன் பாபு மற்றும் ராகவ் ஜூயல் ஆகியோர் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

1980-களின் பின்னணியில், செகந்திராபாத் பகுதியிலுள்ள ஒரு குடிசைப்பகுதியை மையமாகக் கொண்டு ஆக்ஷன் படமாக உருவாகிறது. இதில் இதுவரை நடித்திராத ஜடால் என்ற மாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நானி. மார்ச் மாதத்தில் வெளியாகவிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகளுக்கு கூடுதல் காலம் தேவைப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வருகிற ஆகஸ்ட் 21ம் தேதிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !