உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை கிர்த்தி குல்ஹாரியின் கடன் அட்டையை பயன்படுத்தி லட்சக் கணக்கில் மோசடி

நடிகை கிர்த்தி குல்ஹாரியின் கடன் அட்டையை பயன்படுத்தி லட்சக் கணக்கில் மோசடி

பாலிவுட் நடிகை கிர்த்தி குல்ஹாரி. 'உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்', 'மிஷன் மங்கல்', 'போர் மோர் ஷாட்ஸ்ட் ஸ் ப்ளீஸ் ' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாரட் ஆப் பிளட், கிரிமினல் ஜஸ்டிஸ், ஹியூமன் உள்ளிட்ட பல வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது தந்தை இந்திய கப்பல்படை அதிகாரியாக உள்ளார்.

இந்த நிலையில் கிர்த்தி சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் 2.43 லட்சத்தை இழந்துள்ளார். கிர்த்தி மும்பையில் ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு வங்கியிலிருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவரது கடன் அட்டையைப் பயன்படுத்தி 'ஏரோமெக்சிகோ ஏர்லைர்ன்ஸ்' நிறுவனத்திற்கு 2,525 அமெரிக்க டாலர் வெளிநாட்டுட் பரிவர்த்தனை நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த கிர்த்தி குல்ஹாரி, உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரது கடன் அட்டையை பயன்படுத்தி நான்கு தனித்தனி வெளிநாட்டுட்டு பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் 2.43 லட்சத்திற்கும் அதிகமான தொகை மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவரது கடன் அட்டையை முடக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கீர்த்தி குல்ஹாரி மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !