உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஊட்டியில் முகாமிட்டுள்ள சிவகார்த்திகேயன்

ஊட்டியில் முகாமிட்டுள்ள சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'சேயோன்'. பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீப நாட்களாக மதுரையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தற்போது ஊட்டிக்குச் சென்றிருக்கும் சிவகார்த்திகேயன், அங்கே ரிலாக்ஸ் ஆக தான் இருப்பது போன்று சில புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, ஒரு சிறிய இடைவெளி.., ஒரு தென்றல் காற்று.., கொஞ்சம் அமைதி.. என்கிற வரிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை வட்டாரப் பகுதியில் 'சேயோன்' படம் உருவாகி வருவதால், அதற்கு அடுத்ததாக ஊட்டியில் இதன் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும், அதற்காகத்தான் சிவகார்த்திகேயன் ஊட்டி சென்றுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் அவரே ஒரு சிறிய இடைவெளி என்று குறிப்பிட்டு இருப்பதால், குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக அவர் ஊட்டி வந்திருக்கிறார் என்றும் இன்னொரு விதமாகவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !