உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவிமோகனை விட்டு கெனிஷா பிரியவில்லையா?

ரவிமோகனை விட்டு கெனிஷா பிரியவில்லையா?


நடிகர் ரவிமோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது. பாடகி மற்றும் ஹீலர் கெனிஷாவால் குடும்பத்தில் பிரச்னை என தகவல்கள் கசிந்தன. ஆனால், அதை ரவிமோகன் மறுத்தார். ஆர்த்தி மற்றும் அவர் குடும்பம் மீது குற்றம்சாட்டினார். தனது மகன்களை கூட பார்க்க விடுவதில்லை. தன்னிடம் சொந்த வீடு இல்லை. தனக்கு வசியம் செய்து விட்டனர் என்று கதறி அழுதார். இந்நிலையில், ஆர்த்தி, குழந்தைகள் செலவுக்கு 3 லட்சம் தர வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆர்த்தி தாயாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் நேற்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில், “ரவி மோகனிடம் ரூ.40 லட்சம் மாதந்தோறும் பராமரிப்பு செலவுக்கு தருமாறு நாங்கள் கேட்கவில்லை. அந்த பணம் எல்லாருக்கும் பெரிய விஷயம். எனினும் எங்க தலையில் ரவிமோகன் வச்சிட்டு போன கடன் இருக்கிறது. 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எந்தவித சலுகையும் செய்யவில்லை. உணவுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறீர்களா என நீங்கள் கேட்கலாம். ஆனால் பள்ளிக் கட்டணம், உணவுக்கு செய்ய வேண்டியது கடமையாகும். ரவி மோகன் விட்டுச் சென்ற கடனால் வீடு ஜப்திக்கு வந்தது போன்றவையெல்லாம் எந்த பெற்றோரும் பார்க்கக்கூடாத ஒன்றாகும். அந்த இரண்டு பசங்களும் அமெரிக்கன் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் ஆண்டுக்கு பள்ளிக் கட்டணம் மட்டுமே ரூ.86 லட்சம் வருகிறது. அதனை ரவிமோகன் தான் கொடுக்க வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது.

பல விஷயங்கள் வெளியே வரவில்லை. இனி அவர்கள் 4 பேரும் வாரத்தில் 2 நாட்கள் சந்தித்து பேசலாம் என கோர்ட் கூறியுள்ளது. அது நல்ல விஷயம். அந்த சந்திப்பு ரவிமோகன் ஆபிசில் அல்லது அவர் ஆழ்வார்பேட்டை வீட்டில் நடக்கலாம். யாரும் அவருக்கு பில்லி சூனியம் வைக்கவில்லை. 15 ஆண்டுகள் மாயாஜால வேலைகள் செய்து ரத்த வாந்தி எடுக்க வைத்ததாக சொல்கிறாரே.. அப்படி என்றால் எப்படி உயிருடன் இருக்க முடியும். அதெல்லாம் இந்த காலத்தில் நம்புகிறார்களா என தெரியவில்லை. அதை செய்து தான் நாங்கள் கட்டுப்படுத்தினோம் என்றால் அன்று ஹீரோவாக உச்சத்தில் இருந்தவர், இன்று எப்படி இருக்கிறார் என யோசித்து பாருங்கள்.

என் பேரன் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு அமெரிக்கா செல்ல விரும்பினான். கடைசி நேரத்தில் தான் பாஸ்போர்ட் காலாவதியாகப் போவதாக எங்களுக்கு தெரிய வந்தது. பெற்றோராக அதில் ரவிமோகனும் கையெழுத்திட வேண்டும். இதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தில் என் பேரன் 6 மணி நேரம் காத்திருந்தும் வருவதாக சொல்லி விட்டு வரவில்லை. மறுபுறம் எங்களுக்கு பக்கம் பக்கமாக நான் கையெழுத்து போட மாட்டேன். நான் ஒன்றும் ஏடிஎம் கிடையாது என மெசெஜ் அனுப்புகிறார். அந்த மெசேஜ் ரவிமோகன் அனுப்பவில்லை. அவர் போனில் இருந்து வேறு யாரோ அனுப்பி உள்ளனர்.

நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆர்த்தி, குழந்தைகள், ரவி மோகன் கடந்த 2 ஆண்டுகளாக சந்திக்கவில்லை. இப்போது மாதம் ஒருமுறை சனி, ஞாயிறு சந்திக்க வேண்டுமென சொல்லப்பட்டுள்ளது. இனியாவது இந்த பிரச்னை சரியாக வேண்டும். எந்த தாயும் பிள்ளைகள் வாழ்க்கையை பிரிக்க நினைக்க மாட்டார். நாங்கள் ஒன்றும் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணவில்லை. 10 ஆயிரம் பேரை கூப்பிட்டு தான் நிகழ்ச்சி நடத்தினோம். ஒரு அம்மாவாக, மாமியாராக, தயாரிப்பாளராக நான் நிறைய செய்துள்ளேன்.

கெனிஷா பிரிந்துவிட்டார், சென்னையை விட்டு சென்றுவிட்டார் என்று செய்திகள் வந்ததே என கேட்க, இல்லை, அவர் பிரியவில்லை. அவர் சென்னையில்தான் இருக்கிறார். ரவிமோகன் கோவாவில் வீடு வாங்கியிருக்கிறார். அவர் இருப்பதால்தான் குழந்தைகள் அப்பாவை சந்திக்கவில்லை. எந்த குழந்தையாவது ஹீலரை வைத்துக்கொண்டு அப்பாவை சந்திக்குமா? என் குடும்பம் பெரியது வசதியானது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கல்பனா ஹவுஸ், 2 ஏக்கரில் இருக்கிறது. அதில் படப்பிடிப்பு நடந்துள்ளது. நாங்கள் பணத்துக்காக யாரையும் பிரஷர் செய்யவில்லை. எங்கள் படத்தால்தான் அவர் சம்பளம் உயர்ந்தது.

நடிகர், முதல்வர் விஜய் மகன் அவர் அப்பா பற்றி ஒரு பேட்டியில் பெருமையாக சொன்னார். அதை பார்த்து கலங்கினேன். அதைப் பார்த்ததும் எனக்கு அழுகையே வந்துடுச்சு. கணவன் மனைவிக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் பிள்ளைகள் அப்பா மீது இப்படித்தான் பாசமாக இருக்க வேண்டும். என் பேரன் அவர் அப்பா பற்றி அந்த மாதிரி சொல்ல வேண்டும். அந்த குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும். என் மகள் விவாகரத்துக்காக வழக்கு போடவில்லை. அவர்தான் வழக்கு நடத்துகிறார். இரண்டு ஆண்டுகளாக குடும்ப நிம்மதி போய்விட்டது. அவர்கள் குற்றச்சாட்டுக்கு பொதுவெளியில் விளக்கம் சொல்ல தயார். அவர்களை வர சொல்லுங்கள், அப்பாவை மகன்கள் பார்க்க விரும்பாவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் ''என்றார். இந்த பேட்டி மூலம் மீண்டும் ரவிமோகன் வீட்டில் கெனிஷா இருக்கிறார் என்பது தெரியவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சசிக்குமார் திருப்பூர்
2026-08-02 15:42:13

ஒரு படத்துக்கு 25 கோடி சம்பளம் இத்தனை வருட பணம் எங்கே