உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : முகமது யூசுப் கான் நடிகர் திலீப் குமாராக மாறியது எப்படி?

பிளாஷ்பேக் : முகமது யூசுப் கான் நடிகர் திலீப் குமாராக மாறியது எப்படி?


1940களில் பாலிவுட்டில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் திலீப் குமார் அதன்பின் சூப்பர் ஸ்டாராக மிகப்பெரிய அந்தஸ்திற்கு உயர்ந்தார். கிட்டத்தட்ட ஐம்பது வருடம் சினிமாவில் பயணித்த இவர் கடந்த 2021ல் மறைந்தார். இவரது நிஜமான பெயர் முகமது யூசுப் கான் என்பது இன்னும் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் எப்படி திலீப் குமாராக மாறினார் என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது, திலீப் குமாரின் தந்தை சினிமாவுக்கு முற்றிலும் எதிரானவராக இருந்தார். அவர் கடும் கோபக்காரர் என்பதால், எங்கே தான் சினிமாவில் நுழைய விரும்புவது தெரிந்தால் தன்னை அடித்துவிடுவாரோ என்கிற பயம் திலீப் குமாருக்கு இருந்தது. அப்படித்தான் 'ஜவார் படாதா' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான போது என்ன பெயர் வைக்கலாம் என்கிற ஆலோசனை நடந்தது. அப்போது பரிசீலனையில் யூசுப் கான், திலீப் குமார் மற்றும் வாசுதேவ் ஆகிய மூன்று பெயர்கள் இருந்தன.

“இயக்குனர் அமியா சக்கரவர்த்தியிடம், எந்தப் பெயர் வேண்டுமானாலும் கொள்ளுங்கள், ஆனால் யூசுப் கான் என்கிற பெயர் மட்டும் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அதுமட்டுமல்ல, புகழ்பெற்ற நடிகை தேவிகா ராணியும் திலீப் குமார் என்கிற பெயரை பரிந்துரை செய்ததால், அதையே என்னுடைய பெயராக முதல் படத்தில் இருந்தும் மாற்றிக் கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !