இந்தியாவில் ரூ.300 கோடி வசூலைக் கடந்த 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே'
உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் படங்களில் ஒன்றாக கடந்த வாரம் வெளியான 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' படம் அமைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் ஐந்து நாட்களில் 300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. மொத்த வசூலாக 330 கோடியைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் 8800 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். சுமார் 225 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் தயாரான படம் தற்போது அதை விட 4 மடங்குக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாம். விரைவில் இப்படம் ஒரு பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2026ம் வருடத்தில் 'டாய் ஸ்டோரி 5' படம் 1067 மில்லியன் யுஎஸ் டாலர், 'மைக்கேல்' படம் 1016 மில்லியன், 'தி சூப்பர் மரியோ கேலக்ஸி மூவி' படம் 1011 மில்லியன் யுஎஸ் டாலர் தொகையை வசூலித்து டாப் 3 இடங்களில் உள்ளன.
'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' மேலே குறிப்பிட்ட படங்களின் வசூலைக் கடந்து நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.