வாசகர்கள் கருத்துகள் (1)
இவர் ஒரு முஸ்லிம் நவீன் என பெயரை மாற்றி கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்
13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் கவனம் ஈர்த்த படம் 'மூடர் கூடம்'. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய நவீன் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கி, நடித்துள்ளார். அவருடன் ஓவியா, சென்ட்ராயன், ராஜாஜி, குபேரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்துள்ளார்.
படம் குறித்து நவீன் கூறியதாவது: 'மூடர் கூடம்' என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். பல ஆண்டுகளாக, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து என்னிடம் கேட்டு வந்தனர். வெறுமனே சீக்வலுக்காக நான் இந்தப் படத்தை உருவாக்க விரும்பவில்லை. ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தும் ஒரு கதையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். 'மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்' அப்படி ஒரு கதையாக அமைந்தது. ரசிகர்கள் விரும்பிய நகைச்சுவையைத் தக்க வைத்துக் கொண்டு, கதாபாத்திரங்களையும், கதை சொல்லலையும் இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு சென்றுள்ளோம்.
முதல் பாகத்தின் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்க வைத்துக் கொண்டு, அதிரடி, கற்பனை மற்றும் உலகளாவிய பின்னணியுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரேஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. காட்சியமைப்பு மற்றும் விஎப்எக்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்க குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், படத்தின் கற்பனை உலகமும், அதிரடி காட்சிகளும் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்களுக்கும் சிறந்த திரையங்க அனுபவம் கிடைக்கும். என்றார்.
இவர் ஒரு முஸ்லிம் நவீன் என பெயரை மாற்றி கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்