உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிம்மதியான பிறந்தநாள் : ஹன்சிகா நெகிழ்ச்சி

நிம்மதியான பிறந்தநாள் : ஹன்சிகா நெகிழ்ச்சி

பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா 'தேசமுடுரு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அன்பிறகு அங்கு சில படங்களில் நடித்துவிட்டு 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

தொடர்ந்து மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கரேத்தே, ரோமியோ ஜூலியட், புலி, அரண்மனை 1 மற்றும் 2, மனிதன் என முன்னணி நடிகர்களுடன் மளமளவென நடித்து வந்த ஹன்சிகாவிற்கு திடீரென மார்க்கெட் சரிந்தது. சரியாக நடிக்க வரவில்லை. வெறும் அழகு பொம்மையாகவே இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. சினிமா வாய்ப்பு குறைந்ததால் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கடந்த 2022ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த மார்ச் மாதம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது ஹன்சிகா மீண்டும் தனது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு “இந்த பிறந்தநாள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துச்சு அமைதியாகவும், மனசுக்கு நிம்மதியா நிறைய நன்றியுடனும் இருந்தது. குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மனசுக்கு பிடிச்ச சில பேர் கூட இந்த நாளை சந்தோஷமா கடந்துள்ளேன்.

சின்ன சின்ன தருணங்களை ரசித்து மனசுக்கு நெருக்கமான இடங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களை பெற்றேன் வாழ்க்கை எனக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும். என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ஒவ்வொரு அனுபவத்துக்கும், தொடர்ந்து என்னை சுற்றி இருக்குற அன்புக்கும் நன்றி. மற்றொரு அழகான வருடத்துக்குள் அடியெடுத்து வைக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !