உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் 16 முதல்வர் வருவாரா? அது முதல் நிகழ்ச்சியாக இருக்குமா?

ஆகஸ்ட் 16 முதல்வர் வருவாரா? அது முதல் நிகழ்ச்சியாக இருக்குமா?


மறைந்த இயக்குனர் பாரதிராஜா, கே. பாக்யராஜ் சாதனைகளை போற்றும்வகையில் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில் 'ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்' என்ற பெயரில் நிகழ்ச்சி நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சினிமா சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்துகொள்கிறார்கள். ஆனாலும், முதல்வர் விஜய் கலந்துகொள்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

முதல்வராக பதவியேற்ற பின், அதாவது மே 10ம் தேதிக்குபின் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. முதல்வர் ஆவதற்கு முன்பு ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஆனபின் பாரதிராஜா, பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜனநாயகன் படத்தை தனியார் தியேட்டரில் பார்த்தார். மற்றபடி பெரியளவில் சினிமா நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பல சினிமாக்காரர்களின் வாழ்த்துகளை மட்டும் நேரில் ஏற்றுக்கொண்டார். இந்த சூழ்நிலையில், ஆகஸ்ட் 16ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், அது அவர் முதல்வராக கலந்துகொண்ட முதல் சினிமா நிகழ்வாக இருக்கும். முறைப்படி அவருக்கு அழைப்பு விடுத்தாலும் அவர் வருவாரா? மாட்டாரா? என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. பாரதிராஜா, பாக்யராஜ் சீனியர் என்றாலும் அவர்கள் இயக்கிய படங்களில் விஜய் நடித்தது இல்லை. பிற்காலத்தில் அவர்களுடன் இவர் இணைந்து நடித்ததும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !