உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனராக முத்திரை பதிப்பாரா விஷால்?

இயக்குனராக முத்திரை பதிப்பாரா விஷால்?


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் அர்ஜூன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்த அனுபவம் உடையவர்.

விஷால் நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் ஆரம்பமாகி நின்று போன 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்க வேலைகள் நடந்தது. ஆனால், அதுவும் பின்னர் நின்று போனது.

இந்நிலையில் ரவி அரசு இயக்க விஷால் நடிக்க 'மகுடம்' படம் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்னை என்று கிசுகிசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அது உண்மைதான் என்று சொல்லுமளவிற்கு படத்தை இயக்கும் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டார்.

அவரது இயக்கத்தில் வெளியாக உள்ள முதல் படமாக இப்படம் நாளை வெளியாகப் போகிறது. படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது 'மார்க் ஆண்டனி' படத்தின் ஞாபகம் வந்தாலும், இயக்குனராக விஷால் எப்படி முத்திரை பதித்திருப்பார் என ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் போட்டிக்கு உள்ளதும், 'மகுடம்' படம் 3 மணி நேரம் ஓடக் கூடிய படம் என்பதும் இப்படத்திற்கான சவால்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !