ஜனாதிபதியிடம் புரஸ்கார் விருது பெற்ற சந்திரசேகர்
ADDED : 5 hours ago
பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து அவரது படங்களில் சிறு சிறு வேடங்களில நடித்து வந்த வாகை சந்திரசேகர், ‛நிழல்கள், ஒரு தலை ராகம்' படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு குணசித்தர நடிகராக 300 படங்களுக்கு மேல் நடித்தார். 2002ம் ஆண்டு வெளியான 'நண்பா நண்பா' படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய இவர் இயல் இசை நாடக மன்ற தலைவராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் அவருக்கு சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நேற்று டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு புரஸ்கர் விருது வழங்கி கவுரவித்தார்.