உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் படம் இயக்கும் துபாய் பெண் இயக்குனர்

தமிழ் படம் இயக்கும் துபாய் பெண் இயக்குனர்

தமிழ்நாட்டில பிறந்து துபாயில் வளர்ந்தவர் ஸெனோபர் பாத்திமா, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில் அதிபர் என பன்முகங்களை கெண்டவர். இவர் சென் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் குறும்படங்கள், ஆந்தாலஜி தொடர்கள் மற்றும் முழுநீளத் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். சைபர் குற்றங்கள், குடும்ப வன்முறை, நம்பிக்கை, உளவியல் உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் சமகாலப் பிரச்னைகள் அவரது படைப்புகளில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் திரைப்படத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுடன் இணைந்து தமிழ் படங்களை தயாரிக்க இருக்கிறார். அதில் ஒரு படத்தை அவரே இயக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது “எனது திரைப்படப் பயணத்தில் துபாய் எப்போதும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும். அதே நேரத்தில், சென்னை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம். எல்லைகளைக் கடந்து செல்லும் கதைகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இந்தியா மற்றும் அரேபியாவின் அற்புதமான திறமைகளையும், இரு நாடுகளின் திரைப்படக் கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன். இதை வெறும் ஒரு விரிவாக்கமாக நான் பார்க்கவில்லை. மாறாக, இரண்டு துடிப்பான திரைப்படச் சூழல்களுக்கு இடையே நீண்டகால படைப்பாற்றல் கூட்டாண்மைக்கான தொடக்கமாகவே பார்க்கிறேன்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !