உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொடக்கம் இயக்குனர் டைரக்ஷனில் நடிப்பதை அறிவித்த மோகன்லால்

தொடக்கம் இயக்குனர் டைரக்ஷனில் நடிப்பதை அறிவித்த மோகன்லால்

நடிகர் மோகன்லாலை பொறுத்தவரை சீனியர், ஜூனியர் என இரண்டு தலைமுறை இயக்குனர்களுக்கும் மாறி மாறி தனது படங்களை இயக்கும் வாய்ப்பை அளித்து வந்தார். அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற '2018' படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி அறிவித்துள்ளார் மோகன்லால். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்குகிறது.

இந்த இயக்குனர் தான், மோகன்லால் மகள் விஸ்மயாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி இயக்கிய 'தொடக்கம்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாகவே மோகன்லாலை வைத்து இயக்க வேண்டும் என ஜூட் ஆண்டனி ஜோசப் ஆசைப்பட்டு வந்த நிலையில், அவரது மகளுக்கு வெற்றிகரமான அறிமுகத்தை கொடுத்துவிட்டு தற்போது மோகன்லாலின் படத்தையும் கைப்பற்றியுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !