உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 90 கோடி வசூல் கடந்த 'டிசி': 100 கோடியைத் தொடுமா?

90 கோடி வசூல் கடந்த 'டிசி': 100 கோடியைத் தொடுமா?


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான படம் 'டிசி'. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 7ம் தேதி இப்படம் வெளியானது.

'ஏ' சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும் இளம் ரசிகர்களின் வரவேற்பு இந்தப் படத்திற்குக் கிடைத்தது. அதன் காரணமாக வியாபார ரீதியாக இந்தப் படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது.

தயாரிப்பு நிறுவனம் பத்து நாட்களுக்கு முன்பாக 4 நாட்களில் 50 கோடி வசூல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் படம் பற்றிய வசூல் விவரம் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்படி படம் 90 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 100 கோடி வசூலை இந்தப் படம் பெறுமா என்பது இந்த வார இறுதி வசூலைப் பொறுத்தே சொல்ல முடியும்.

இந்த வருடத்தில் அறிமுகக் கதாநாயகர்களின் படங்கள் நல்ல வசூலைக் குவித்துள்ளன. 'வித் லவ்' படம் மூலம் அபிஷன் ஜீவிந்த், 'யூத்' படம் மூலம் கென் கருணாஸ் ஆகியோரது படங்கள் வெற்றி பெற்றது. அதற்கடுத்து 'டிசி' படமும் அப்படியானதொரு வெற்றியைப் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !