மீண்டும் வெற்றியை பதிவு செய்வாரா மமிதா பைஜூ?
டியூட் படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திலும் மமிதா பைஜூவின் நடிப்பு அதிக கவனத்தைப் பெற்றது. இதனால் தென்னிந்தியத் திரையுலகில் அவர் ஒரு பிரபலமான இளம் நடிகையாக உருவெடுத்துள்ளார். அவரது அடுத்த படம் மலையாளத்தில் வெளியாகிறது. பெத்லஹேம் குடும்ப யூனிட் என்ற இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ளார். பிரேமலு படத்தை இயக்கிய கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதியான நாளை திரைக்கு வருகிறது.
பிரேமலு படத்தைப் போல, இதிலும் தனது இயல்பான வசீகரத்துடன் கூடிய முக்கியக் கதாநாயகியாக நிவின் பாலியுடன் இணைந்து நடித்துள்ளார் மமிதா பைஜூ. குடும்ப பின்னணி மற்றும் நகைச்சுவை, உணர்ச்சிப்பூர்வமான சூழலை மையமாகக் கொண்ட இக்கதையில், கதையின் நகர்வுக்கு உதவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார்.