வாரணாசிக்கு பிறகு அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிக்கிறாரா மகேஷ் பாபு?
ராஜமவுலி இயக்கும் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார் மகேஷ் பாபு. அவருடன் பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
வாரணாசி படத்திற்குப் பிறகு, விரைவாக ஒரு படத்தை முடிக்கும் நோக்கில் அனில் ரவிபுடியுடன் மீண்டும் மகேஷ் பாபு இணையவுள்ளதாக டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி இணையத்தில் விவாதங்களை உருவாக்கியதோடு, மகேஷ் பாபு பிரம்மாண்டமான படங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
அனில் ரவிபுடி தனது எக்ஸ் தளத்தில் இந்த செய்தியை மறுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சார் எப்போதும் எனக்கு மிகவும் பிரியமானவர். அவர் மீது எனக்கு எப்போதும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. தற்போது பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மையற்றவை. தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.