'கேஜிஎப் 2' வசூலை முறியடிக்காத 'டாக்சிக்'
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான பான் இந்தியா படம் 'டாக்சிக்'. இப்படத்தின் முதல் நாள் வசூலாக 150 கோடி வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.
இந்த வசூல் யஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'கேஜிஎப் 2' படத்தின் முதல் நாள் வசூலுடன் ஒப்பிடும் போது குறைவுதான். இப்படம் இந்திய அளவில் முதல் நாள் வசூலாக 134 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். வெளிநாட்டு வசூல் 30 கோடியையும் சேர்த்தால் மொத்த வசூல் 164 கோடி எனத் தகவல்.
'டாக்சிக்' படத்திற்கு இந்திய வசூல் எவ்வளவு எனக் குறிப்பிடவில்லை. கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதி வசூல் எவ்வளவு என்பதைப் பொறுத்துத்தான் இந்தப் படம் வெற்றி பெறுமா, தோல்வியடையும் என சொல்ல முடியும் என்கிறார்கள்.