உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து அசத்தல் பாடல்கள் தந்த, இளையராஜா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி

அடுத்தடுத்து அசத்தல் பாடல்கள் தந்த, இளையராஜா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி

தமிழ் சினிமா இசை ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் கடந்த வாரத்தில் அதிகமான பரபரப்பை, பதிவுகளை, விமர்சனங்களை, பதிவு செய்ய வைத்த பெருமை இளையராஜாவைச் சேரும்.

அவரிடமிருந்து இப்படி ஒரு பாடல்களைக் கொடுக்க வைத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இளையராஜா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 28ல் வெளியாக உள்ள 'டோரத்தி' படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.

முதல் சிங்கிளான 'கல்யாண விருந்து' பாடல் 80, 90 காலங்களுக்கே ரசிகர்களை அழைத்துக் கொண்டு சென்றது. இளையராஜா எழுதி யுகேந்திரன், அந்தோணி தாசன், பிரியா ஜெர்சன் பாடிய இந்தப் பாடல் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது. யு டியூப் தளத்தில் 7 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் பாடலை பிரித்துப் பிரித்து ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த சிங்கிள் பாடலாக, 'முத்துமணி' என்ற பாடலை ஆகஸ்ட் 29ம் தேதி வெளியிட்டார்கள். இளையராஜா எழுதி ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடிய பாடல். இரண்டு நாட்களிலேயே இப்பாடல் 3 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது.

அடுத்தடுத்து அசத்தலான இரண்டு பாடல்கள் இளையராஜா இசையில், பாடல் வரிகளில் வந்துள்ள அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரைச்சல் இசைப் பாடல்களுக்கு மத்தியில் இந்த இரண்டு பாடல்களும் இனிமையான ரசனையான பாடல்களாக உள்ளது என ரசிகர்கள் பரவலாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !