ஜேசன் சஞ்சய் ஹீரோவாகியிருந்தால் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகி இருப்பார் : சந்தீப் கிஷன்
முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தந்தை வழியிலேயே ஹீரோவாக சினிமாவில் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரோ இயக்குனராக அறிமுகமாகப் போகிறார். சந்தீப் கிஷன் நடிப்பில் அவர் இயக்கி உள்ள சிக்மா படம் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரப்போகிறது. பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத்ராஜ், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ஜேசன் சஞ்சய் ஒரு சிறப்பு பாடலில் நடனமாடி இருக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.
சிக்மா பட நாயகனாக சந்தீப் கிஷன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ஜேசன் சஞ்சய் படம் இயக்குவதற்கு பதிலாக ஹீரோவாக நடித்திருந்தால் அவரது முதல் படத்திலேயே இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகி இருப்பார். என்றாலும் தான் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக இயக்குனராக திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார். படமும் சிறப்பாக வந்துள்ளது. அவர் இயக்கியுள்ள சிக்மா மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவருக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுக்கும் என்று வாழ்த்தி உள்ளார் சந்தீப் கிஷன்.