விரைவில் லக்கி பாஸ்கர் 2 : துல்கர் சல்மானை உற்சாகப்படுத்திய வெங்கி அட்லூரி
ADDED : 1 days ago
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள ஆக்ஷன் படம் ஐ ஆம் கேம். இப்படத்தின் விளம்பரப் பணிகளில் ஒரு பகுதியாக, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் சிறப்பு நேர்காணல் ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் சமீபத்தில் பங்கேற்றார். இந்த நேர்காணலின் இறுதியில், லக்கி பாஸ்கர் 2 படத்திற்கான ஈர்க்கக்கூடிய கதையுடன் விரைவில் திரும்புவதாக துல்கரிடம் வெங்கி அட்லூரி உறுதியளித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பதிலளித்த துல்கர் சல்மான், அந்தக் கதையைக் கேட்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் கதை தயார் ஆனதும், இதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். லக்கி பாஸ்கர் படம் துல்கரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.