உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே….

தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே….

இந்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா பல வருடங்களுக்குப் பிறகு டில்லிக்கு வெளியே நடைபெற உள்ளது.

72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, செப்டம்பர் 22ம் தேதி குஜராஜ்த் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்க உள்ளார்.

1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் டில்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். 17வது மற்றும் 18வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு டில்லியை விட்டு வெளியே செல்கிறது இந்த நிகழ்வு.

முக்கிய கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டம் குஜராத்தில் நடைபெறுவது கடந்த சில வருடங்களில் வழக்கமாகி உள்ளது. அது போல அரசின் முக்கிய விழா தற்போது குஜராத்திற்கு மாறியுள்ளது.

மேலும், டில்லியில் வழக்கமாக இந்த விழா நடைபெறும் விஞ்ஞான் பவன் இடிக்கப்பட உள்ளதும் ஒரு காரணம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !