உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார்

ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார்


கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'ஒரிஜினல் மான்ஸ்டர்'. ஆர். சந்துரு இயக்கும் இந்த படம் ஹிந்தி, கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இந்த பான் இந்தியா படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார் சிவராஜ்குமார். அதோடு, தெலுங்கு நடிகர் சுனிலும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஹிந்தி வசனங்களும் அதிகமாக இடம்பெறுகிறது. மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் மோஷன் போஸ்டர் டைட்டில் வெளியீட்டு விழாவின்போது, இப்படத்தில் ஹிந்தி வசனங்கள் பேசி நடிப்பது குறித்து சிவராஜ்குமார் இடத்தில் மீடியாக்கள் கேள்வி கேட்டன. அப்போது அவர் ஹிந்தி எனது இரண்டாவது மொழி. அதனால் என்னால் இந்தி பேச முடியும். அதோடு ஹிந்தி ஒரு தேசிய மொழி. அது எப்படி நமக்கு தெரியாமல் இருக்கும் என்றும் பதில் கொடுத்திருந்தார். இப்படி ஹிந்தியை தேசிய மொழி என்று அவர் சொன்னது சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு சிவராஜ் குமார் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் கூறுகையில், ''ஹிந்தியை தேசிய மொழி என்று நான் கூறியிருந்தேன். அது இந்திய மொழிகளில் ஒன்று. எனது மொழி கன்னடம். எப்போதுமே எனக்கு இது முக்கியமானது. என்றாலும், ஹிந்தியை இந்திய மொழிகளில் ஒன்று என்று சொல்லும் விஷயத்தில் நான் குழம்பி விட்டேன். ஹிந்தி அவர்களது மொழி. கன்னடம் என்னுடையது. எல்லோருக்குமே அவரவர் மொழி முக்கியமானது'' என்று தெரிவித்திருக்கிறார் சிவராஜ் குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !