உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய், அஜித்

மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய், அஜித்


கார் பந்தயம் நிறைவடைந்த பின்னர், பந்தயக் களத்தில் முதல்வர் விஜய் மற்றும் ரேஸர் அஜித்குமார் இருவரும் மூவர்ணக் கொடியுடன் இணைந்து இருக்கும் காட்சிகள் மற்றும் முதல்வர் ரேஸ் டிராக்கில் ஓடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழக முதல்வர் விஜய் தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்குவது, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுடன் நேற்று (செப்.,12) பிரிட்டன் சென்றார். அங்கு அவர் இந்த சில்வர்ஸ்டோன் கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெற்ற மிச்செலின் லே மான்ஸ் கப் கார் பந்தயத்தை நேரில் சென்று முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார். லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்கியூட்டில் கார் ரேஸ் முடிந்த பிறகு மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய், அஜித்குமார் இருவரும் உள்ள காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !